வேகம்
கண்கள் தேடும் விதிகள் …..உன் உதடுகள் வரையும் நீதிகள் ….மொழியின்றிப் பதுங்கும் நாகம் அதுபாய்கின்ற வேகம் படைகள் நடுங்கும்…..
கண்கள் தேடும் விதிகள் …..உன் உதடுகள் வரையும் நீதிகள் ….மொழியின்றிப் பதுங்கும் நாகம் அதுபாய்கின்ற வேகம் படைகள் நடுங்கும்…..
அதிசயமாய் வெளிறிய வானம்,ஆண்டொன்று கழித்து காண்கிறேன்…..இடையிடையே வந்து போயிருக்கக் கூடும்கண்ணில் பட்டு மனதில் பதியாமல் ….
பெண் அவள் உயிர் கொண்டு பேசுகிறாள்அவள் அவன் எனப்பர்க்கவில்லை …அவன் கூடவென எதிர்பார்த்திருப்பாள்…
புரியாத வாழ்க்கையின் முடி தேடி ஒரு பயணம்உலகம் ஒத்த ஒன்றை விரும்பா ஒரு ஜீவன்பிறர் நிலை மேவி உயர் நிலை தேடும்தன்னுள் தொலைவினும் கானாவாக விரும்பாஉடல் கானவாகினும் உயிர் ஓயா……
குளிர் குடிக்கும் என் இதயங்கள்உன் குரல் கேட்கத் துடிக்கும்…..வெறுமைக்குள் உனைக் காணும்என் தூங்கா விழிகள்…..உடல் தாண்டி மெய் தீண்டிஉயிரறையும் ஓருயிர்….உறையும் என் நினைவுகளில்உன் வெப்பத்தில் தீண்டு….அகிலம் வென்று இரவில் உன் மடி சேர்வேன்…..
உருவங்கள் தேடி உன்னை உருவாக்கத் தூண்டும் என் ஆசைகள்அழகு மட்டுமல்ல உன் குறும்புகளும் வேண்டும் என்பதால் தானோ என்னவோஇன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறேன்
ஒரு படைப்பவனின் தேடல் Read More »
காரிருள் பூசி அவள் கேசம் படைத்ததாய் பிரம்மனும் மார்தட்டிக் கொள்ளக் கூடும் .. ஒருநாள் அந்தப் பூவில் தங்கிவிடவென தான் பூத்ததாய் பூக்களும் சொல்லக் கூடும் .. அங்கு தங்கி விளையாடிச்செல்லவென தென்றலும் வீசுவதாய் அவள் அறிந்திருக்க கூடும் .. இதில் நானும் கூட அதில் ஓர் பாகமாகவே ஜனித்திருக்கவும் கூடும் ..
யுத்தகளங்கள் சொல்லட்டும் இவன் ரத்தங்கள் தன்னுள் உறைந்ததென்று……சுற்றங்கள் சொல்லட்டும் உறையும் இரத்தத்தின் சூட்டில் இவன் திமிராய் வாழ்ந்தாநென்று….திசைகள் சொல்லட்டும் இவன் தேடியலைந்த அமைதியை…..இனி தெய்வங்களும் சொல்லட்டும் இவன் ஆறா வடுக்களின் வலிகளை…..
முன்னோக்கிச்செல்லும் எனது வண்டியிநூடு பின்னோக்கிச்செல்லும் சூழலோடு கடந்து போகும் நினைவுகளாய்கரையும் எனது வாழ்நாளின் ஒருபகுதி.நின்றமைதியாய்ச் சென்ற நாட்களெல்லாம் விரைந்தோடுவதாய் ஒரு பிரமை.சிறு குழந்தயின் குறும் சிரிப்போ பள்ளித்தோழியின் குறுநகையோ ஏதோவொன்றை இன்னமும் தேடத்தான் செய்கிறேன் பார்க்கும் முகங்களிலெல்லாம்.ஏக்கங்கள் இப்படியாய் ஏமாற்றிப்போக அக்கரைப் பச்சையாய் துடிக்கிறேன் கண்டம் தாண்ட முடியாமல்……