Uncategorized

Chaar kadham பாடல் இசையில் தமிழில் ஓர் பாடல்

வா வா, நீவா நாம் போகலாம் ..மேகங்கள் மேலேறியே ..யார் இவன் இங்கு யார் இவள் ..அறியாமல் நாம் பேசலாம் .. மேகங்கள் உதிரும் இப் பூக்களும் பொழியும் ..காற்றோடு நாம் போகலாம் ..யார் இவன் இங்கு யார் இவள் ..அறியாமல் நாம் பேசலாம் ..

Chaar kadham பாடல் இசையில் தமிழில் ஓர் பாடல் Read More »

பகிடிவதை

உணர்வு பறிகொடுத்த ஜடமது, பறித்தவன் பரிகாசமாய்க் கேட்கிறான் பலதும் .. அது பல் கலை கழகம் அங்கு பலருக்கும் தெரிவாகும் தகுதி வெறி .. இது சாதுக்கள் மிரண்டு போகும் நரகம் .. மனிதத் தோல்களுக்குள் மிருகங்கள் வாழும் ஜாலங்கள் தான் உலகத்தின் பெரிய கண்கட்டு வித்தை .. நடந்தவை நடந்துவிட்டதாம் எப்படிச்சொல்லி என்ன  என்றே பதில்கள் பல இருந்தும் கூட ஊமையாகிப் போனாயோ?? நீ சொல்லியிருக்க வேண்டும் .. இறந்தகாலச் செயல்கள் நினைவில் நரகங்களாய் உழன்று கொண்டிருக்கின்றன என்று …. இனி இவன் நிலை கெட்டு மதி கெட்டு பின் விடுபட்டு வரும் போதும் கூட வடுபட்ட வலிகள் தொடர்ந்திருந்து வலிதந்த செயல்களை உரைத்துக்கொண்டேயிருக்கும்

பகிடிவதை Read More »

புதிய கவிஞன் ..

நான் அவள் கண்களின் கைதி, கூந்தலின் ஓய்விடம் .. இன்னும் ஏதெதுவாகவோ ஆகிக்கொண்டிருந்தேன் .. அவள் .. பாரதியும் கூட வடித்திராத புதுமைப் பெண் .. முடி முதல் அடி வரை எனக்காய் மலர்ந்திருந்தாள் .. உதடுகள் அடைபட்டுக் கிடக்க ஒவ்வோர் இதயத்துடிப்பிலும் ஓர் கவிதை .. ஆதலால் இந்த வாசகனும் கவி வடிப்பதாய் இருக்கிறேன் ..

புதிய கவிஞன் .. Read More »

புதிதாய் ஓர் விநாயகர் பாடல்

வெற்றி தருவான் எங்கள் விநாயகன் அவனை வேண்டி தொழுதிடுவோம் எதிலும் ஜெயித்திடுவோம் .. அன்று உமையாளுக்காவலாக உருவானவன் இன்று எமைக் காக்க ஆலமரத்தடியில் அமர்ந்தானவன் .. விக்கினங்கள் தீர்க்கும் உன்னிடம் எம் குறைகள் சொல்வோம் தீரும் அவை தீரும் இக்கணமே .. வெற்றி தருவான் .. தொலைதூர வெளிச்சத்தில் ஓடுகிறோம் தினம் பாவத்தில் அடிபட்டு மாளுகிறோம் .. எமைக் காக்க யாருமில்லை வா வா வா .. இறப்பென்ன பிறப்பென்ன அர்த்தங்கள் தா தா தா .. வெற்றி தருவான் .. தாய் தந்தை முதலென்று உணர வைத்தாய் ஓர் தந்தத்தில் வால்மீகி கதை செய்து முடித்தாய் .. ஓம்கார வடிவான விநாயகனே பாழும் கிரகங்கள் வாட்டி வதைக்கின்றனவே காத்திடவே வா வா வா .. வெற்றி தருவான் ..

புதிதாய் ஓர் விநாயகர் பாடல் Read More »

Galle face Green

It’s been said Galle Face Green originally extended over a much larger area than exists today and as of today it’s the largest open space in Colombo now. This place initially used for horse racing and for some other games.  This is a most popular place among all the people from all over the world. Its crowded mostly in the evenings and specially weekends with the people from other part of the country comes picnic and kite riding. Here where the world’s tallest artificial Christmas tree showcased from 25 December 2016 till 5th Jan 2017. People comes here mostly as groups to talk and having food next to the sea and relax under the sky. All shops around this place mainly supply foods, children toys and some. Its a magnificent view to relax. Most famous hotels in Srilanka situated here as well. Personally I would suggest to go early morning.  Toilet Facilities available too… [googlemaps https://www.google.com/maps/embed?pb=!1m18!1m12!1m3!1d3960.724449171245!2d79.84276641409545!3d6.923506220306236!2m3!1f0!2f0!3f0!3m2!1i1024!2i768!4f13.1!3m3!1m2!1s0x3ae259396a72f305%3A0x5e7e24c6bf94136f!2sGalle%20Face%20Green!5e0!3m2!1sen!2slk!4v1589956405260!5m2!1sen!2slk&w=600&h=450] Opening Hours: Open SpaceTickets: FreeParking: Only Public parking available outsideTime: Nearly takes 2 hours to enjoy the part at the minimum

Galle face Green Read More »

இறைவா

கரு கொண்டு உடல் கிழித்து உயிர் கொண்டு வந்தேன்வாழ்வு மேடு பள்ளமென்றாய் ஏற்றுக் கொண்டேன்பொருள் பறித்தாய் பொறுமையும் கைக் கொண்டேன்இன்று என்னிலை பறிக்கிறாய் .. நான் என்றுமேஉன் திறன் காட்ட உருவாகி அழிவேனா

இறைவா Read More »

காணவில்லை

இருட்டிலொரு தேடல் விடை தேடியல்லமாய உலகத்தில் மனிதனைத் தேடிஇன்மையின் இருப்பைத் தாண்டி மாயத்தின் மேல் நம்பிக்கைதன் பிள்ளைகள் தம்மைத் தாமே சிதைப்பதை காணவொண்ணாமலோ என்னவோ இறைவன் நிரந்தரமாக மேலேயே தங்கிவிட்டான்

காணவில்லை Read More »