கவிதை

என் கனவே . . கலைந்திடாதே

கனவுகளே என் இனிய கனவுகளே.. கலைப்பதுவோ உறவுகளே..முடிவெனவே தெரிந்த பின்னும் ..தொடர்ந்திடவே தவிக்கிறேனே.. பழகிய கலையை விரும்பிய கனாவை ..உதிர்த்திடத் தாங்குமோ .. இதயம் ..நின்றிடக் கூடுமோ..ஒரு துளி உடலில் .. முழுவதும் உயிராய் இருப்பது அதுவல்லவோ..அட உயிர் இன்றி உடல் வாழுமோ.. கனவுகளே கனவுகளே..முடிவெனவே தெரிந்த பின்னும் ..தொடர்ந்திடவே தவிக்கிறேனே.. இருப்பதை முயன்றிட எதுவொன்று தேவையோ ..இதிலென்ன சாதனை ..உடல் வலிக்கின்ற போதும்.. மனம் களைத்திட்ட போதும்..இதயம் சிரித்திடல் வேண்டுமே .. என்றும் உதடுகள் .. இதயங்கள் வலிக்கா செயல்களில் தானே புன்னகை செய்திடுமே .. என் கனவுகளே.. இனிய கனவுகளே..முடிவது தான் தெரிந்த பின்னும் ..தொடர்ந்திடவே தவிக்கிறேனே..

என் கனவே . . கலைந்திடாதே Read More »

மாற்றமா மறைவா

நோயாளிகளோடு வைத்தியன் மாற்றமடைகிறான் மாணவர்களோடு ஆசிரியன் மாற்றமடைகிறான் மனிதர்களோடு இறைவன் என்ன மாற்றம் அடைந்திருப்பான்

மாற்றமா மறைவா Read More »

ஓர் வார்த்தை சொல்

இச் சாலைகள் தோறும் புது வாசம்.. தெரியும் இது தரை இறங்கிய நிலவின் முதல் நடைப்பயணம்.. நீ யாரோ .. உன் பேர் எதுவோ ..இது எதுவோ .. எவர் விதித்த பயணமோ ..முதல் சந்திப்பு என்றாலும் ஓர் வார்த்தை சொல் ..இறுதிவரை கை கோர்த்து நாம் போகலாம்

ஓர் வார்த்தை சொல் Read More »

உன் ஞாபகங்கள் மட்டுமே மிச்சம்

தவறுகள் எங்கோ தண்டனைகள் எங்கெங்கோபதில்கள் யாரிடமோ பக்கத்தில் கேட்பதும் ஏனோபார்வையில் பேசிய பாடங்கள் மறந்தே போனதோமனதோடு பேசிய .. மனதில்நினைவுகளும் இன்று காயங்களோ

உன் ஞாபகங்கள் மட்டுமே மிச்சம் Read More »

கடவுள் உள்ளிருந்து மனிதன்

ஓராயிரம் உருவெடுத்து தன்னை அறிய முயன்றான் ஒருவன்.. அவை அனைத்தும் பல்லாயிரம் சிந்தனை சிறகடித்து தன்னை தேடுகின்றன..

கடவுள் உள்ளிருந்து மனிதன் Read More »