ஒரு மனம்
கண் பிரித்து உயிர் உள் விதைத்து உடல் நிறைந்த காதல்உயிர் துண்டி உடல் மெலிந்தும் உதடுமட்டும் சொல்ல மறுப்பதேனோ……
கண் பிரித்து உயிர் உள் விதைத்து உடல் நிறைந்த காதல்உயிர் துண்டி உடல் மெலிந்தும் உதடுமட்டும் சொல்ல மறுப்பதேனோ……
நிழல்களின் நெருக்கடிக்குள் ஒரு சாலை …..மரங்களுக்குள் கூட போராட்டம் யார் இடத்தை யார் கைப்பற்றிக் கொள்வதென்று…காற்றின் அரசியலில் மரங்களின் சண்டைகள் முடிந்த பாடில்லை….இருள்களில் ஒளிந்து போயிருந்த அவற்றின் சுயநலன்கள்விதைகளுள் ஊடுறுவி விருட்சங்களாகிக் கொண்டிருந்தன….
தொல்லை பேசியின் தொலை நோக்கினால் புகைப்படத்தில் விழுந்த உன் உருவம் இன்று வரை தேவதைகள் இவ்வுலகில் சஞ்சரிப்பதாய் உரைத்துக் கொண்டிருக்கிறது …
இருட்டின் எஜமானன் சத்தங்களின் நிசப்தம் கொண்டு ,பொரி துண்டி எரிய வைக்கப் பார்க்கிறான்,திரியறைந்த மெழுகுக் கட்டம் பற்றிக் கொண்டால் முழுதும் எரியும்…..
கரு மேகங்கள் காண்பதை மறைக்கும் ஒளிக் கீற்றது இருளதைக் கிழிக்கும் அங்கு மென் மேகங்கள் மோதும் ஒலி கேட்டதும் வான் மழையது தரையோடு ஒளிந்ததுவே
பலகோடி துளியது தெளித்து உயிர்கள் ஜனனித்தன அவை மண்ணில் செடி கொடி என மனிதன் விலங்கு என அழைக்கப்பட்டன .. அவை மரணித்த போது மண்ணோடு கலந்து கடலோடு சேர்ந்திட்டன .. உள்ளோடும் உயிரது கடலோடு கடந்திடவே அதைமழையென பொழிவதற்காய் மேகங்கள் மீண்டும் அழைத்தனவே ..
பெண்மை உடுத்த ஆண்மையும்ஆண்மை கொண்ட வேகமும்ஒன்றாய் சேரும்போது உலகத்தின்இன்பங்கள் அற்பமாய்ப் போயின
படைத்துப் போன கடவுள் திரும்பி வராதிருக்க……..பயம் கொண்டு படையல்கள் வைத்தாயோ….அவர் வந்து வாழவென அரண்மனைகள் செய்தாயோ….. மலையில் வாழும் ஈசனும் கடலில் துயிலும் விஷ்ணுவும்கொட்டடியில் பிறந்த ஏசுவும் போதிமரத்தடியில் விழித்த புத்தனும் …மண்விட்டு மறைந்திட…… வழி காட்ட எவருண்டு என்று சாயிகளையும் சாமிகளையும் பிடித்தாயோ…….சமயங்கள் பல வளர்த்தாயோ…..?
கடந்த கால தவறுகளை அழிக்க முடியாமல் வருந்துவதிலும்…..தவறவிட்ட இளமைக்காலத்தை பெறமுடியாமல் தத்தளிப்பதிலுமே….எதிர்காலம் நிகழ்காலத்தின் ஊடாக விரைவாக நகர்ந்துவிடுகிறது முடிவில்லா இறுதியை நோக்கி…..
தகுதிக்குத் தடுப்பில்லா முகமூடிகள்கிழிந்தளியும் போதும் ஒழிந்தோடிவிட்டுஇன்னொன்றால் மூடும்,உயர்ச்சியில் மனிதர்கள் உள்ளத்தில் இல்லை……