நம்பிக்கை
இரு கால்கள் இருகை துணை கொண்டுநடந்தபோது உடலில் இல்லாத உறுதிகள் மனதிலிருந்தன…..
சிவா அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். தான் இதுவரை காலமும் facebook வழியாக மட்டுமே பேசி வந்த அந்தப் பெண்ணைப் பார்க்கப் போகிறோமே என்ற ஆனந்தம் அவனுக்கு. மனதுக்குள் அவளின் profile படத்தை நினைத்துக்கொண்டான். என்னதான் அபிசேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை மணமுடித்ததில் பொறாமை இருந்தாலும் தன் தேவதை அதை விட அழகு தான் என மனதுக்குள் பெருமிதப் பட்டுக்கொண்டான். இன்னும் அரை மணிநேரத்தில் அந்த இடத்தை அவன் அடைந்து விடுவான். அவன் கார் அந்தப் பெருந்தெருவில் 75KM /h வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இடையில் அவனது கணணி விற்பனை நிலையத்தில் இருந்து ஒருவர் அவனைப் பேசச்சொல்லி அவனது கைப்பேசி மூலம் அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார். வேண்டாவெறுப்பாக அந்த அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்தான். அவனது காரியதரிசி தொடர்பிலிருந்தாள். சார், உங்களை அவசரமாக பார்க்கவேண்டுமென்று சொல்லிக்கொண்டு ஒருவர் ரொம்ப நேரமாக காத்துக்கொண்டிருக்கிறார். சிவ பூசையில் கரடி என திட்டிக்கொண்டு யார் என விசாரித்தான். வந்திருப்பவன் தன் ஆத்ம நண்பன் ரவி என்றறிந்ததும் அவனை உடனடியாகப் பேசச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். அவன் சொல்லச்சொல்ல சிவா முகத்தில் குரும்சிரிப்பு பூக்க ஆரம்பித்திருந்தது. சிவா அந்த கடைத்தொகுதி முன்பு அவனது பெரிய காரை மிகுந்த சிரமத்துக்கிடையில் நிறுத்தி விட்டு அவளைக் கூட்டத்திற்கிடையில் தேடினான். கண்டுபிடித்தும் விட்டான். படத்திலிருந்ததை விட அழகு தான். “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள்….” தூரத்தில் கடையில் ஒலித்துக்கொண்டிருந்தது அவளுக்கான பின்னனிப்பாடலோ எனத்தோன்ற வைத்தது ஆச்சரியமில்லை. என் முன்னே ஒரு தேவதை நடந்து வந்து கொண்டிருந்தாள் என்பதே நிஜம். வழக்கமான பரஸ்பர அறிமுகங்கள் முடிந்ததும் சிறிது நேரம் அங்கிருந்த ஒரு கடையில் அமர்ந்து ஒரு குளிர்பானம் அருந்திக்கொண்டு பேசினேன்.. பேசினாள்….பேசினோம்… இனிமையான குரல். குயில் குரலை பரிட்சிக்க ஆசையும் வந்தது. சிறிது சிறிதாக எம் சூழலுக்கு இயற்கை கருமை நிறத்தை பூசிக்கொண்டிருந்தது. அவள் புறப்படத்தயரானபோது நானே அழைத்துச்செல்வதாகக் கூறி எனது காரிற்குள் ஏற்றிக்கொண்டேன். சிறிது சிறிதாக காரின் வேகத்தை அதிகரித்துச்சென்ற நான் அவளை அந்தப் பேரழகியை அப்படிச் செய்வேன் என நானே எதிர் பார்த்திருக்கவில்லை. கண்ணிமைக்கும் நொடி உற்றிவிட்டேன் என் கையிலிருந்த acidஐ சரியாக அவள் முகத்தில். ஆயிற்று உலகத்தில் இருந்து ஒரு அழகி பெயரை நான் எடுத்து விட்டேன். வேண்டுமானால் அவள் முன்னாள் அழகி என சொல்லிக்கொள்ளலாம். காமினி, அழகி தற்போது முகம் வெந்து போய் என் காரின் பின் இருக்கையில் மயங்கிப்போய் இருக்கிறாள். இவளை என்ன செய்யலாம்……மனம் பலவாறாக யோசித்து ஒரு முடிவெடுக்க முடியாமல் தவித்தது. பலவாறாக யோசித்து அவளை முதலில் என் குடும்ப வைத்தியரிடம் அழைத்துச்செல்வதாக தீர்மானித்து அவரது வீட்டை நோக்கி காரைத் திருப்பினேன். போகுமுன் அவரை அழைத்து காமினியின் நிலையும் எடுத்துக்கூறியாகிவிட்டது. சுற்றிவர கண்ணாடி சூழ்ந்த அறையில் வைத்தியர் காமினிக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்தார். சிகிச்சை முடிந்ததும் அவள் முகத்தை மாஸ்க் ஒன்றால் மூடிவிட்டார். மறுநாள் காமினி மயக்கநிலையிலிருந்து சுயனினைவுக்குத்திரும்பியிருந்தாள். டாக்டர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். இது வரை ஜன்னல் வலி பாய்ந்த அனுபவம் இல்லாத காரணத்தால் அவள் கால் சுளுக்கிக் கொண்டது. நொண்டி நொண்டி அவள் நடந்து வருவதற்குள் சிவா அந்த இடத்திற்கு வந்து விட்டான், வந்தவன் கையிலிருந்த துப்பாக்கியை நேரே அவளை நோக்கி நீட்டினான். காமினி அவன் காலில் விழுந்து கதற ஆரம்பித்திருந்தாள்.* “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. இதைப்பார்த்து பொருக்க முடியாமல் சிவாவின் தலையில் கட்டையால் அடித்து மயக்கமடையச் செய்தார் டாக்டர் பரந்தாமன் M.B.B.S * “காமினி… வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன். அதற்காக உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன். ஹாஹா என்ன முழிக்கிறாய்……. இங்கே விழுந்து கிடக்கிறானே அவனைப் பற்றி உனக்கு பெரிதாகத் தெரியாதல்லவா.!!? கோவம் வந்தால் கொலையும் செய்யக் கூடிய ஒருவன். பாதிக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன் இது அவனே அறியாமல் அவன் செய்த தவறு. சொல்லிக்கொண்டே சிவாவின் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சிவாவை நோக்கி சுட்டு தான் தன் தலையிலும் ஒன்றை செலுத்திக்கொண்டான். நடந்ததைப் புரிந்து கொள்ள அவளுக்கு சற்று நேரம் எடுத்தது. தன்னால் ஒரு உயிர் பிரிந்ததற்குப் பரிகாரமாகவோ/ அவள் காதலுக்காகவோ ஏனோ குண்டை தனக்குள் செலுத்திக்கொண்டாள் . மூன்று உடல்களிலிருந்தும் வழிந்த ரத்தம் பூமியின் அழுக்கை கரைத்துக் கொண்டிருந்தது.
உனக்காக எல்லாம் உனக்காக Read More »
Lets leave what the professionals says about photography. Usually we see a pic of someone or something that made to look better when using cameras according to how good the camera is.As one wise man says “always be hungry “is what a the morel to photography and keep the gear with you all the time is a must. So why do we need to keep the camera at all time??? well you should be at the right place at right time with right gear to take a shot….all these things enough to make a photograph despite of how good or bad a photographer is. believe me when i say this i’m a terrible photographer yet i have taken some marvelous shots myself all just because i was there. The photo you take should either be something not photographed before or should looks different than others.its where all the editing software comes in. combine all these to take a photo. “This whole process called photography” Continues…….
What is Photography // Part 1 – Introduction Read More »
கல்லோடும் பொருளும் கொண்ட அடைப்பிநூடு ஓடித்திரியும் உடல்கள்கவனியுங்கள் பலகைகள் பாசக்கயிறைத் தடுப்பதில்லை…..
என் தூரிகைகள் வரைந்திடா வண்ணம் நீ…என் பாடல்கள் சொல்லாத சங்கதி நீ ….என் எழுத்துக்கள் உணராத கவிதையும் நீ…. யார் நீ////உன் திமிர் கொண்ட பார்வைகள் என் –சிறைப்பட்ட உணர்வுகளின் விடுதலையை விரும்பி நிற்கிறதே …..
With the Advance Technology nowadays supporting studys increased too. Program development is an important one of them. There are few types in it yet the most important once are web develop sites and apps development. programs used from C to Python for various reasons. some of them are way more flexible like can use java for developing app and webpages. Nowadays website based applications increased significantly too with the help of JavaScript and JQuery. Like app develop there are multiple type of languages like CSS, PHP, SQL and so on to code websites and lots tools like Dreamweaver, Notepad++ and so on used to do so. Although it doesn’t matter what tool used its necessory to learn the code completely will give the result. even a single space or a letter or a colon prevent us from getting the result we require. creating code for 10 lines wont be a problem to find an error but 1000 line will definitly be an issue. so learn with care. Websites Created with HTML and CSS Called static websites. once added javascript it becomes dynamic websites.as the name says static websites shows as it is coded.while Dynamic Pages changes it content and how the look as the way the user interact like click a link, hover over certain part of the page and so on. HTML – Backbone of Webpage. all the rest codes Build from it. its like dividing our webpages into multiple parts(we calls it tags) and assign a value to itCSS – use the tags to change its part as the way we wishes by changing its properties. its safe to say without css there wont be a beautiful websitesJavaScript – Changes the pages and its content with the users usage.Jquery – a framework based on JavaScript. but work well mainly in animating.PHP – Works like a bridge between the user and the server.SQL – Manage the files in Server.
Become a Web Developer // Part 1 – Introduction Read More »
வானம் வரைந்து வைத்த ஓவியங்கள் மேகங்கள் ஆக .. தேனிக்கள் உதறிவைத்த விதைகள் பூந்தோட்டங்களாக .. அதில் சிதறி விழுந்த அலைகடல் மழைநீரென ஆகிவிட .. நடுவில் நீ மட்டும் தேவதை ஆகிப் போனாய் ..