அவள்
நிலவில் அவள் வதனம் கண்டதாய் எவனோ புகழ்ந்திருக்கக் கூடும் .. புவியழகு மொத்தமும் அவள் நடைபயின்றதனாலேயே ஜனித்திருக்கவும் கூடும் .. தென்றலும் அவள் தீண்டியதால் என்பதாய் அவன் அறிந்திருக்கக் கூடும் .. முடிவிலா ஆழம் இவள் கண்கள் கொண்டதென அவன் இப்போதுதேனும் அறிந்திருக்கக் கூடும் ..