Thuvarakan / துவாரகன்

அயல்தேச அடிமை

குளிர் குடிக்கும் என் இதயங்கள்உன் குரல் கேட்கத் துடிக்கும்…..வெறுமைக்குள் உனைக் காணும்என் தூங்கா விழிகள்…..உடல் தாண்டி மெய் தீண்டிஉயிரறையும் ஓருயிர்….உறையும் என் நினைவுகளில்உன் வெப்பத்தில் தீண்டு….அகிலம் வென்று இரவில் உன் மடி சேர்வேன்…..

அயல்தேச அடிமை Read More »

ஒரு படைப்பவனின் தேடல்

உருவங்கள் தேடி உன்னை உருவாக்கத் தூண்டும் என் ஆசைகள்அழகு மட்டுமல்ல உன் குறும்புகளும் வேண்டும் என்பதால் தானோ என்னவோஇன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறேன்

ஒரு படைப்பவனின் தேடல் Read More »

கார்கூந்தல்

காரிருள் பூசி அவள் கேசம் படைத்ததாய் பிரம்மனும் மார்தட்டிக் கொள்ளக் கூடும் .. ஒருநாள் அந்தப் பூவில் தங்கிவிடவென தான் பூத்ததாய் பூக்களும் சொல்லக் கூடும் .. அங்கு தங்கி விளையாடிச்செல்லவென தென்றலும் வீசுவதாய் அவள் அறிந்திருக்க கூடும் .. இதில் நானும் கூட அதில் ஓர் பாகமாகவே ஜனித்திருக்கவும் கூடும் ..

கார்கூந்தல் Read More »

இவன்

யுத்தகளங்கள் சொல்லட்டும் இவன் ரத்தங்கள் தன்னுள் உறைந்ததென்று……சுற்றங்கள் சொல்லட்டும் உறையும் இரத்தத்தின் சூட்டில் இவன் திமிராய் வாழ்ந்தாநென்று….திசைகள் சொல்லட்டும் இவன் தேடியலைந்த அமைதியை…..இனி தெய்வங்களும் சொல்லட்டும் இவன் ஆறா வடுக்களின் வலிகளை…..

இவன் Read More »

அயல் தேச அடிமைகள்

முன்னோக்கிச்செல்லும் எனது வண்டியிநூடு பின்னோக்கிச்செல்லும் சூழலோடு கடந்து போகும் நினைவுகளாய்கரையும் எனது வாழ்நாளின் ஒருபகுதி.நின்றமைதியாய்ச் சென்ற நாட்களெல்லாம் விரைந்தோடுவதாய் ஒரு பிரமை.சிறு குழந்தயின் குறும் சிரிப்போ பள்ளித்தோழியின் குறுநகையோ ஏதோவொன்றை இன்னமும் தேடத்தான் செய்கிறேன் பார்க்கும் முகங்களிலெல்லாம்.ஏக்கங்கள் இப்படியாய் ஏமாற்றிப்போக அக்கரைப் பச்சையாய் துடிக்கிறேன் கண்டம் தாண்ட முடியாமல்……

அயல் தேச அடிமைகள் Read More »

கலிகாலம்

கதைகளுக்குள் ஒழிந்துபோன கடவுள்கள் வாழும் காலம்….சிலைக்குள் தேடினும் சிலுவைக்குள் தேடினும் எவர்க்கும் அகப்படா மாயம்….இது கலிகாலமென்ற விஷயம் தெரியாமல் இன்னும் சில தாய்மார்கள்யேசுவையும் புத்தனையும் காந்தியையும் பெற்றெடுத்துவிடுகிறார்கள்…..

கலிகாலம் Read More »

விடைகள் தேடி

பூமியில் சொல்லாத உறவிது நீவந்து உருவாகுமா?நினைவினில் உண்டான உணர்விது கனவோடு முடிவாகுமா?உறவுகள் காணாத கருவிது விருட்சங்கள் தடை போடுமா?காலங்கள் காணாத இரவுகள் நம்மோடு முடிவாகுமா?முடிவுகள் அறியாத வாழ்விது நீவந்தாய் இனிதாகுமா?விடைகள் தேடி உன்னுடன்….

விடைகள் தேடி Read More »

Watch “Singer S.P.B Meet Cricketer Kumar Sangakara in Kamban Vizha (Two legends)” on YouTube

Let’s not go for the statistics of how many songs he sung. everyone will accept he definitely is a good singer. Even if he got Guinness award he would never say that on his own. lots and lots of people in internet says he do have a Guinness award. Well, I searched for it but couldn’t find any. so instead ill share what SPB himself things about it.

Watch “Singer S.P.B Meet Cricketer Kumar Sangakara in Kamban Vizha (Two legends)” on YouTube Read More »

புதுமைப் பெண்

என் எண்ணங்களில் வாயாடும் அவள் நிஜங்களில் பேசியதே இல்லை ..அவள், என் தனிமையில் ஒரு பொழுதினில் தோற்றம் பெற்றவள் ..ஒருத்திக்காய் இதயத்தில் இடம் கொடுத்தவர்கள் பலர் நானோ ..அவள் உருவாகி வாழ சிந்தனையில் சரிபாதி அவளாக்கியவன் ..உள்ளுக்குள் நிறைந்து மலர்ந்து அங்கேயே வாழத்துவங்கி விட்டாள் ..அதிகாரம் ஆர்ப்பாட்டம் வஞ்சகம் அவள் பேச்சில் இல்லை ..இன்னும் வருமான விளக்கங்கள் அவள் கேட்டதில்லை ..ஒற்றைப் பார்வையில் ஓராயிரம் கேள்விகள் ஒளித்து வைத்திருந்தாள் ..கேட்காமல் கூட சொல்லியிருப்பேன் ஆனால் அவள் பதில்களை விரும்புவதில்லை ..விடையில்லாக் கேள்விகளில் லயிக்க விரும்பிய புதுமைப் பெண் அவள் ..இன்னும் அவள் அழகியல் எனைக் கவிஞன் ஆக்கிவிட ..அவ்வளவையும் கூட்டி எழுத்துக்களில் உரு அமைத்து அருகே வைத்துக் கொண்டேன் ..எழுத்துக்களில் வெளிவந்த அக்கணம் எனக்குள் உருவாகிய தேவதை கனவிலும் சேராது காணாது போனாள் .. அக் கவிதைகள் உயிர் பெற்றிருக்கக்கூடுமானால் ..நிஜம் என்று நானும் இவன் யாரோ என்று இவளும் வாழ்ந்திருக்கக் கூடும் ..

புதுமைப் பெண் Read More »

பெரும் போர்

இறை வாயில் உடைத்து சவால் விட்டாயிற்று .. அழித்த அதனில் ஒரு சிறு பொறி செய்த கார்யமே இப்பெரும் அழிவு .. இதனினும் நாம் சாதிப்போம் என ஓர் வெளிர் படை வீறுகொண்டுவெளியேற்றம் செய்திட்டது .. பெரும் சேதம் .. உயிர் தப்பிய ஓர் அணுவை எடுத்த இறைவன் சிந்தித்தான் .. செயல் எவர் செய்திருப்பினும் அதில் தன் திறன் காட்டவெனவோர் படைப்பை வெளியிட்டான் இறைவன் ..

பெரும் போர் Read More »