Thuvarakan / துவாரகன்

மழை ரகசியம்

பலகோடி துளியது தெளித்து உயிர்கள் ஜனனித்தன அவை மண்ணில் செடி கொடி என மனிதன் விலங்கு என அழைக்கப்பட்டன .. அவை மரணித்த போது மண்ணோடு கலந்து கடலோடு சேர்ந்திட்டன .. உள்ளோடும் உயிரது கடலோடு கடந்திடவே அதைமழையென பொழிவதற்காய் மேகங்கள் மீண்டும் அழைத்தனவே ..

மழை ரகசியம் Read More »

வழிகாட்டி

படைத்துப் போன கடவுள் திரும்பி வராதிருக்க……..பயம் கொண்டு படையல்கள் வைத்தாயோ….அவர் வந்து வாழவென அரண்மனைகள் செய்தாயோ….. மலையில் வாழும் ஈசனும் கடலில் துயிலும் விஷ்ணுவும்கொட்டடியில் பிறந்த ஏசுவும் போதிமரத்தடியில் விழித்த புத்தனும் …மண்விட்டு மறைந்திட…… வழி காட்ட எவருண்டு என்று சாயிகளையும் சாமிகளையும் பிடித்தாயோ…….சமயங்கள் பல வளர்த்தாயோ…..?

வழிகாட்டி Read More »

முடிவு

கடந்த கால தவறுகளை அழிக்க முடியாமல் வருந்துவதிலும்…..தவறவிட்ட இளமைக்காலத்தை பெறமுடியாமல் தத்தளிப்பதிலுமே….எதிர்காலம் நிகழ்காலத்தின் ஊடாக விரைவாக நகர்ந்துவிடுகிறது முடிவில்லா இறுதியை நோக்கி…..

முடிவு Read More »

முகங்கள்

தகுதிக்குத் தடுப்பில்லா முகமூடிகள்கிழிந்தளியும் போதும் ஒழிந்தோடிவிட்டுஇன்னொன்றால் மூடும்,உயர்ச்சியில் மனிதர்கள் உள்ளத்தில் இல்லை……

முகங்கள் Read More »

யோகி

புரியாத வாழ்க்கையின் முடி தேடி ஒரு பயணம்உலகம் ஒத்த ஒன்றை விரும்பா ஒரு ஜீவன்பிறர் நிலை மேவி உயர் நிலை தேடும்தன்னுள் தொலைவினும் கானாவாக விரும்பாஉடல் கானவாகினும் உயிர் ஓயா……

யோகி Read More »