Thuvarakan / துவாரகன்

ஆசை

இரை தேடி கூண்டில் அடையும் கிளிகள்…பந்தங்களின் பணக் கயிற்றுக்கள் நொருக்குமதன் உயிரை ….வானத்தின் ஒவ்வோர் கரையிலும் அலையோடும் அதன் கனவுகள்….பருக்கைச் சோற்றில் கரைந்து கண்களில் வடியும் அதன் ஆசைகள்…திரி எரித்தும் ஒளி தரும் மெழுகுதிரியாய்இறகிருந்தும் அடிமையாய்ப் போனது என் பேசும் கிளி…

ஆசை Read More »

முட்டாள் சமூகம்

சுவடின்றி அழிந்து போய்விட்டன உன்தடங்கள்….அதோ அவன் உன்னை பொரித்தெடுத்த வார்தைகளையும் காற்று மொத்தமாய் குடித்து விட்டிருந்தது…..காட்சி முடிந்ததும் சிரித்தே செல்கிறாய்…பழக்கப்பட்டிருப்பாய் போலும்….நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததோ இல்லை அதை நீ பூவாக்கினாயோ….முன்தலைமுறைகள் உனக்கு உருவாக்கிய வரைமுறைகள் கண்டு வெட்க்கித் தலைகுனிகிறேன் …..அம் முட்டாள் சமூகத்தோடு சேர்த்து எனையும் மன்னித்து விடு…வரும் தலைமுறைக்கேனும் நல்லதோர் சமூகத்தைப் பெற்றுக்கொடுத்துவிடு……

முட்டாள் சமூகம் Read More »

உனக்காக

வெட்கங்கள் பூக்கும் உந்தன் கன்னங்கள் வழியேஉருகிக் கரைந்து போனேன் முத்தங்களாய்….. உன் கண் பார்த்து மலர்ந்த கவிதைகள் நெஞ்சுக்குள் துடிக்கிறது உன் பார்வையில் படுவதற்காக!

உனக்காக Read More »

வரலாறு

வாழ்கையை வகுத்தவன் விதியை கணிக்க இயலாதுநேரத்தை வகுத்தவன் வேகத்தை கணிக்க இயலாதுதன்னை வரையறுத்தவன் பிறரை உணர இயலாது பிறரிலிருந்து தன்னை பிரித்தவனால் வரலாற்றில் தன்னை நிலை நிறுத்த என்றுமே முடியாது

வரலாறு Read More »

கண்களால் ஒரு கைது

அறியாத வயதில் புரியாத பெண்மைஇலக்கணங்கள் தேடும் அறியாத ஆண்மைசிறைகள் சொல்லும் விழுமியங்கள் அவள்கண்கள் பேசுவதால், ஒப்பந்தங்கள் ஏதுமின்றிஉள் சென்று தாளிட்டுக் கொள்கிறேன்

கண்களால் ஒரு கைது Read More »

சுயநலம்

நிழல்களின் நெருக்கடிக்குள் ஒரு சாலை …..மரங்களுக்குள் கூட போராட்டம் யார் இடத்தை யார் கைப்பற்றிக் கொள்வதென்று…காற்றின் அரசியலில் மரங்களின் சண்டைகள் முடிந்த பாடில்லை….இருள்களில் ஒளிந்து போயிருந்த அவற்றின் சுயநலன்கள்விதைகளுள் ஊடுறுவி விருட்சங்களாகிக் கொண்டிருந்தன….

சுயநலம் Read More »

தீ

இருட்டின் எஜமானன் சத்தங்களின் நிசப்தம் கொண்டு ,பொரி துண்டி எரிய வைக்கப் பார்க்கிறான்,திரியறைந்த மெழுகுக் கட்டம் பற்றிக் கொண்டால் முழுதும் எரியும்…..

தீ Read More »

மழை வானம்

கரு மேகங்கள் காண்பதை மறைக்கும் ஒளிக் கீற்றது இருளதைக் கிழிக்கும் அங்கு மென் மேகங்கள் மோதும் ஒலி கேட்டதும் வான் மழையது தரையோடு ஒளிந்ததுவே

மழை வானம் Read More »