Thuvarakan / துவாரகன்

இறைவா

கரு கொண்டு உடல் கிழித்து உயிர் கொண்டு வந்தேன்வாழ்வு மேடு பள்ளமென்றாய் ஏற்றுக் கொண்டேன்பொருள் பறித்தாய் பொறுமையும் கைக் கொண்டேன்இன்று என்னிலை பறிக்கிறாய் .. நான் என்றுமேஉன் திறன் காட்ட உருவாகி அழிவேனா

இறைவா Read More »

காணவில்லை

இருட்டிலொரு தேடல் விடை தேடியல்லமாய உலகத்தில் மனிதனைத் தேடிஇன்மையின் இருப்பைத் தாண்டி மாயத்தின் மேல் நம்பிக்கைதன் பிள்ளைகள் தம்மைத் தாமே சிதைப்பதை காணவொண்ணாமலோ என்னவோ இறைவன் நிரந்தரமாக மேலேயே தங்கிவிட்டான்

காணவில்லை Read More »

மழை

நீ வந்து நனைத்துப் போகும் போதெல்லாம்ஆயிரம் பாரங்கள் கரைத்துப் போவதாய் உணர்கிறேன் வானம் ஏன் அடிக்கடி அழுகிறது ..உன் சோகம் அதற்கும் சொல்லிவிட்டாயோ ..

மழை Read More »

விதி

பூக்கும் பூக்களும் சிரிக்கும் குழந்தையும் உலகத்தின் மகிழ்ச்சியை தோற்றுவிப்பவர்கள்.. வெற்றுக் காகிதத்தில் கீறப்பட்ட வண்ணங்கள் பணத் தாள்களான  போது  அன்பு பாசம் காணாமல் போயிருந்தன..

விதி Read More »

ஏழ்மையின் பயணம்

கால்கள் நடந்து கொண்டிருக்கின்றனகேட்ட சொற்கள் காதுகளை பிடித்திழுக்கபார்த்த செயல்கள் கண்களை பிய்த்தெறியபேசிவிட்ட சுடு சொற்கள் இதயம் கிழித்தெடுக்கஇவையனைத்தையும் தாங்கிக்கொண்டு கால்கள்இன்னும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன இடைவிடாமல் ஓர் இலக்கு நோக்கி ..

ஏழ்மையின் பயணம் Read More »