முன்னோக்கிச்செல்லும் எனது வண்டியிநூடு பின்னோக்கிச்செல்லும் சூழலோடு கடந்து போகும் நினைவுகளாய்
கரையும் எனது வாழ்நாளின் ஒருபகுதி.
நின்றமைதியாய்ச் சென்ற நாட்களெல்லாம் விரைந்தோடுவதாய் ஒரு பிரமை.
சிறு குழந்தயின் குறும் சிரிப்போ பள்ளித்தோழியின் குறுநகையோ ஏதோவொன்றை இன்னமும் தேடத்தான் செய்கிறேன் பார்க்கும் முகங்களிலெல்லாம்.
ஏக்கங்கள் இப்படியாய் ஏமாற்றிப்போக அக்கரைப் பச்சையாய் துடிக்கிறேன் கண்டம் தாண்ட முடியாமல்……