காரிருள் பூசி அவள் கேசம் படைத்ததாய் பிரம்மனும் மார்தட்டிக் கொள்ளக் கூடும் ..
ஒருநாள் அந்தப் பூவில் தங்கிவிடவென தான் பூத்ததாய் பூக்களும் சொல்லக் கூடும் ..
அங்கு தங்கி விளையாடிச்செல்லவென தென்றலும் வீசுவதாய் அவள் அறிந்திருக்க கூடும் ..
இதில் நானும் கூட அதில் ஓர் பாகமாகவே ஜனித்திருக்கவும் கூடும் ..