என் எண்ணங்களில் வாயாடும் அவள் நிஜங்களில் பேசியதே இல்லை ..
அவள், என் தனிமையில் ஒரு பொழுதினில் தோற்றம் பெற்றவள் ..
ஒருத்திக்காய் இதயத்தில் இடம் கொடுத்தவர்கள் பலர் நானோ ..
அவள் உருவாகி வாழ சிந்தனையில் சரிபாதி அவளாக்கியவன் ..
உள்ளுக்குள் நிறைந்து மலர்ந்து அங்கேயே வாழத்துவங்கி விட்டாள் ..
அதிகாரம் ஆர்ப்பாட்டம் வஞ்சகம் அவள் பேச்சில் இல்லை ..
இன்னும் வருமான விளக்கங்கள் அவள் கேட்டதில்லை ..
ஒற்றைப் பார்வையில் ஓராயிரம் கேள்விகள் ஒளித்து வைத்திருந்தாள் ..
கேட்காமல் கூட சொல்லியிருப்பேன் ஆனால் அவள் பதில்களை விரும்புவதில்லை ..
விடையில்லாக் கேள்விகளில் லயிக்க விரும்பிய புதுமைப் பெண் அவள் ..
இன்னும் அவள் அழகியல் எனைக் கவிஞன் ஆக்கிவிட ..
அவ்வளவையும் கூட்டி எழுத்துக்களில் உரு அமைத்து அருகே வைத்துக் கொண்டேன் ..
எழுத்துக்களில் வெளிவந்த அக்கணம் எனக்குள் உருவாகிய தேவதை கனவிலும் சேராது காணாது போனாள் ..
அக் கவிதைகள் உயிர் பெற்றிருக்கக்கூடுமானால் ..
நிஜம் என்று நானும் இவன் யாரோ என்று இவளும் வாழ்ந்திருக்கக் கூடும் ..