தரையில் நகர்ந்து தளர்ந்து போவதாய் இனி உச்சத்தில் பறந்து உலகம் காணப்போகிறேன் ..
என் வாசலில் கரைந்ததற்காய் பறந்து அலையும் உங்கள் காதிற்குள் கதறிப்போகிறேன் ..
இதோ என் கடலிடம் திருடியதற்காய் மேகங்கள் உங்களை விழுங்கி விட்டேன் ..
இனி அப் பாலத்தில் இருந்து பாய்ந்து அடிவரை காற்றோடு மிதப்பேன் ..
மீதமும் பறக்க முடிந்தால் தரையிடம் விடைபெற்றுக் கொள்கிறேன் .. இனி மீண்டும் வரவே மாட்டேன் ..