பகிடிவதை

உணர்வு பறிகொடுத்த ஜடமது, பறித்தவன் பரிகாசமாய்க் கேட்கிறான் பலதும் .. அது

பல் கலை கழகம் அங்கு பலருக்கும் தெரிவாகும் தகுதி வெறி .. இது சாதுக்கள் மிரண்டு போகும் நரகம் ..

மனிதத் தோல்களுக்குள் மிருகங்கள் வாழும் ஜாலங்கள் தான் உலகத்தின் பெரிய கண்கட்டு வித்தை ..

நடந்தவை நடந்துவிட்டதாம் எப்படிச்சொல்லி என்ன  என்றே பதில்கள் பல இருந்தும் கூட ஊமையாகிப் போனாயோ??

நீ சொல்லியிருக்க வேண்டும் .. இறந்தகாலச் செயல்கள் நினைவில் நரகங்களாய் உழன்று கொண்டிருக்கின்றன என்று ….

இனி இவன் நிலை கெட்டு மதி கெட்டு பின் விடுபட்டு வரும் போதும் கூட வடுபட்ட வலிகள் தொடர்ந்திருந்து வலிதந்த செயல்களை உரைத்துக்கொண்டேயிருக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *