நான் அவள் கண்களின் கைதி, கூந்தலின் ஓய்விடம் ..
இன்னும் ஏதெதுவாகவோ ஆகிக்கொண்டிருந்தேன் ..
அவள் .. பாரதியும் கூட வடித்திராத புதுமைப் பெண் ..
முடி முதல் அடி வரை எனக்காய் மலர்ந்திருந்தாள் ..
உதடுகள் அடைபட்டுக் கிடக்க ஒவ்வோர் இதயத்துடிப்பிலும் ஓர் கவிதை ..
ஆதலால் இந்த வாசகனும் கவி வடிப்பதாய் இருக்கிறேன் ..