வெற்றி தருவான் எங்கள் விநாயகன் அவனை
வேண்டி தொழுதிடுவோம் எதிலும் ஜெயித்திடுவோம் ..
அன்று உமையாளுக்காவலாக உருவானவன் இன்று
எமைக் காக்க ஆலமரத்தடியில் அமர்ந்தானவன் ..
விக்கினங்கள் தீர்க்கும் உன்னிடம் எம் குறைகள்
சொல்வோம் தீரும் அவை தீரும் இக்கணமே ..
வெற்றி தருவான் ..
தொலைதூர வெளிச்சத்தில் ஓடுகிறோம் தினம்
பாவத்தில் அடிபட்டு மாளுகிறோம் ..
எமைக் காக்க யாருமில்லை வா வா வா ..
இறப்பென்ன பிறப்பென்ன அர்த்தங்கள் தா தா தா ..
வெற்றி தருவான் ..
தாய் தந்தை முதலென்று உணர வைத்தாய்
ஓர் தந்தத்தில் வால்மீகி கதை செய்து முடித்தாய் ..
ஓம்கார வடிவான விநாயகனே பாழும் கிரகங்கள்
வாட்டி வதைக்கின்றனவே காத்திடவே வா வா வா ..
வெற்றி தருவான் ..