கால்கள் நடந்து கொண்டிருக்கின்றன
கேட்ட சொற்கள் காதுகளை பிடித்திழுக்க
பார்த்த செயல்கள் கண்களை பிய்த்தெறிய
பேசிவிட்ட சுடு சொற்கள் இதயம் கிழித்தெடுக்க
இவையனைத்தையும் தாங்கிக்கொண்டு கால்கள்
இன்னும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன
இடைவிடாமல் ஓர் இலக்கு நோக்கி ..