ஏன்
உயிர் ஒழுகும் நேரத்திலும் உன் நினைவுகள் உடலேறுகின்றனநீயோ முகம் காட்டாமல் கனவில் மட்டும்
இருட்டிலொரு தேடல் விடை தேடியல்லமாய உலகத்தில் மனிதனைத் தேடிஇன்மையின் இருப்பைத் தாண்டி மாயத்தின் மேல் நம்பிக்கைதன் பிள்ளைகள் தம்மைத் தாமே சிதைப்பதை காணவொண்ணாமலோ என்னவோ இறைவன் நிரந்தரமாக மேலேயே தங்கிவிட்டான்
நீ வந்து நனைத்துப் போகும் போதெல்லாம்ஆயிரம் பாரங்கள் கரைத்துப் போவதாய் உணர்கிறேன் வானம் ஏன் அடிக்கடி அழுகிறது ..உன் சோகம் அதற்கும் சொல்லிவிட்டாயோ ..
நான் புகைப்படம் எடுக்க முயலும் போதெல்லாம் ஒளிந்து கொண்டது நிலா…. உன்னை போலவே அதற்கும் வெட்கம் வந்ததாம்…
பூக்கும் பூக்களும் சிரிக்கும் குழந்தையும் உலகத்தின் மகிழ்ச்சியை தோற்றுவிப்பவர்கள்.. வெற்றுக் காகிதத்தில் கீறப்பட்ட வண்ணங்கள் பணத் தாள்களான போது அன்பு பாசம் காணாமல் போயிருந்தன..
கால்கள் நடந்து கொண்டிருக்கின்றனகேட்ட சொற்கள் காதுகளை பிடித்திழுக்கபார்த்த செயல்கள் கண்களை பிய்த்தெறியபேசிவிட்ட சுடு சொற்கள் இதயம் கிழித்தெடுக்கஇவையனைத்தையும் தாங்கிக்கொண்டு கால்கள்இன்னும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன இடைவிடாமல் ஓர் இலக்கு நோக்கி ..
இரை தேடி கூண்டில் அடையும் கிளிகள்…பந்தங்களின் பணக் கயிற்றுக்கள் நொருக்குமதன் உயிரை ….வானத்தின் ஒவ்வோர் கரையிலும் அலையோடும் அதன் கனவுகள்….பருக்கைச் சோற்றில் கரைந்து கண்களில் வடியும் அதன் ஆசைகள்…திரி எரித்தும் ஒளி தரும் மெழுகுதிரியாய்இறகிருந்தும் அடிமையாய்ப் போனது என் பேசும் கிளி…
சுவடின்றி அழிந்து போய்விட்டன உன்தடங்கள்….அதோ அவன் உன்னை பொரித்தெடுத்த வார்தைகளையும் காற்று மொத்தமாய் குடித்து விட்டிருந்தது…..காட்சி முடிந்ததும் சிரித்தே செல்கிறாய்…பழக்கப்பட்டிருப்பாய் போலும்….நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததோ இல்லை அதை நீ பூவாக்கினாயோ….முன்தலைமுறைகள் உனக்கு உருவாக்கிய வரைமுறைகள் கண்டு வெட்க்கித் தலைகுனிகிறேன் …..அம் முட்டாள் சமூகத்தோடு சேர்த்து எனையும் மன்னித்து விடு…வரும் தலைமுறைக்கேனும் நல்லதோர் சமூகத்தைப் பெற்றுக்கொடுத்துவிடு……