சுவடின்றி அழிந்து போய்விட்டன உன்தடங்கள்….
அதோ அவன் உன்னை பொரித்தெடுத்த வார்தைகளையும் காற்று மொத்தமாய் குடித்து விட்டிருந்தது…..
காட்சி முடிந்ததும் சிரித்தே செல்கிறாய்…பழக்கப்பட்டிருப்பாய் போலும்….
நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததோ இல்லை அதை நீ பூவாக்கினாயோ….
முன்தலைமுறைகள் உனக்கு உருவாக்கிய வரைமுறைகள் கண்டு வெட்க்கித் தலைகுனிகிறேன் …..
அம் முட்டாள் சமூகத்தோடு சேர்த்து எனையும் மன்னித்து விடு…
வரும் தலைமுறைக்கேனும் நல்லதோர் சமூகத்தைப் பெற்றுக்கொடுத்துவிடு……