படைத்துப் போன கடவுள் திரும்பி வராதிருக்க……..
பயம் கொண்டு படையல்கள் வைத்தாயோ….
அவர் வந்து வாழவென அரண்மனைகள் செய்தாயோ…..
மலையில் வாழும் ஈசனும் கடலில் துயிலும் விஷ்ணுவும்
கொட்டடியில் பிறந்த ஏசுவும் போதிமரத்தடியில் விழித்த புத்தனும் …
மண்விட்டு மறைந்திட……
வழி காட்ட எவருண்டு என்று சாயிகளையும் சாமிகளையும் பிடித்தாயோ……. சமயங்கள் பல வளர்த்தாயோ…..?