இரை தேடி கூண்டில் அடையும் கிளிகள்…
பந்தங்களின் பணக் கயிற்றுக்கள் நொருக்குமதன் உயிரை ….
வானத்தின் ஒவ்வோர் கரையிலும் அலையோடும் அதன் கனவுகள்….
பருக்கைச் சோற்றில் கரைந்து கண்களில் வடியும் அதன் ஆசைகள்…
திரி எரித்தும் ஒளி தரும் மெழுகுதிரியாய்
இறகிருந்தும் அடிமையாய்ப் போனது என் பேசும் கிளி…