வண்ணக்கடலில் முங்கிவந்த பூச்சியொன்று
பூத்திருந்த அழகில் களைப்பை உதறிவிட்டது.
இறகு கொடு நானும் சுற்றி வருகிறேன் என
பார்த்திருந்த விழிகளிரண்டும் கேட்டு விட்டது.
பார்த்திருந்த கடவுள் காற்றை அனுப்பிவைத்தான்.
பறக்கும் கனவை கூட பறக்க வைத்துவிட்டான்.
மனிதன் நான் என்றேனுமொருநாள் இரும்பிலேனும்
இறக்கை செய்து அவனை சென்று சந்தித்திட வேண்டும் என என் சந்ததிக்கு சொல்லிவைக்கிறேன்.