மனம் கொண்ட வேதனை

கண்களை வருடிய கனவுகள் எங்கேதூக்கங்கள் திருடிய நினைவுகள் இங்கே..அமைதியை தேடியே.. இதயங்கள் அலையுது அம்மம்மோ.. நேற்றைய காயம் இன்றைய கனவா..பயணங்கள் ..தான் அந்த காயத்தின் மருந்தா ..உறவுகள் உதிர்ந்திட உயரங்கள் வருமா..கண்கள் கணலென தினம் சுடுமா ..காய்ந்த நம் இதயங்கள் மருந்துகள் தேடுது அம்மம்மோ.. தோல்விகள் சாய்த்திட தோள்களே உறவா ..கடலான கண்ணீர் வற்றிய தளமா ..நாளை உன் வாழ்வினில் தென்றலும்வருமா ..புது மாற்றம் ஒன்றைத் தந்திடுமா .. மனம் கொண்ட வேதனை சொற்களில் புதைத்தேன்..நிறைந்த என் வலிகளில் இசையும் படைத்தேன் ..உயிர் கொண்ட சோகம் பாடலில் சொல்வேன்..புது மாற்றம் ஒன்றைக் காட்டி வைப்பேன்..மாற்றங்கள் தேடியே கால்களும் நகருது அம்மம்மோ..

மனம் கொண்ட வேதனை Read More »