வா அன்பே, சில தூரம் ஒன்றாய் போகலாம் ..
நெடுவானம் போகும் வரை நாளும் நீளும் ..
கருமேகம் சூளும் அவை மழையாகி வீழும் ..
மழை நீர் சுவை நாடி பூவிதழ் அவிழும், அவ் ..
மலர் மீது மையல் கொண்டு பிறந்த பூவும்,
மலரிதள் மயக்கத்தில் அதிர்ந்து உதிர்ந்து போகும் ..
மண்ணில் நடம் பயிலவந்த தேவதையென ..
இச் சாலைகள் நீளும் என் பாதைகள் தோறும் ..
கைகோர்த்து நாம் போகலாம் ..