கனவுகளே என் இனிய கனவுகளே..
கலைப்பதுவோ உறவுகளே..
முடிவெனவே தெரிந்த பின்னும் ..
தொடர்ந்திடவே தவிக்கிறேனே..
பழகிய கலையை விரும்பிய கனாவை ..
உதிர்த்திடத் தாங்குமோ .. இதயம் ..
நின்றிடக் கூடுமோ..
ஒரு துளி உடலில் .. முழுவதும் உயிராய் இருப்பது அதுவல்லவோ..
அட உயிர் இன்றி உடல் வாழுமோ..
கனவுகளே கனவுகளே..
முடிவெனவே தெரிந்த பின்னும் ..
தொடர்ந்திடவே தவிக்கிறேனே..
இருப்பதை முயன்றிட எதுவொன்று தேவையோ ..
இதிலென்ன சாதனை ..
உடல் வலிக்கின்ற போதும்.. மனம் களைத்திட்ட போதும்..
இதயம் சிரித்திடல் வேண்டுமே .. என்றும் உதடுகள் .. இதயங்கள் வலிக்கா செயல்களில் தானே புன்னகை செய்திடுமே ..
என் கனவுகளே.. இனிய கனவுகளே..
முடிவது தான் தெரிந்த பின்னும் ..
தொடர்ந்திடவே தவிக்கிறேனே..